இந்த கணணி யுகத்தில் பல்லாயிரக்கணக்காண இலங்கைத் தமிழர்களின் இணையத் தளங்கள் உலாவிவரும் இக்காலகட்டத்தில், தற்போது முள்ளிவாய்களுடன் முடிந்த தமிழ் தேசியத்தின் யுத்தம், அதன் ஆவணங்களையும் அத்துடனேயே அழித்தது.
தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கிய எகாதிபத்தியங்கள் உட்பட அனைத்து நாடுகளும் மீண்டும் தமிழ்மக்கள் போராடுவதை தடுக்க, அதன் ஆவணங்களையும் ஆவணச் சின்னங்களையும் அழித்து வருகின்றது. தாம் கூறும் வரலாற்றை வரலாற்றின் படமாக்குவதற்கு முயற்சிக்கின்றது இந்த அரசுகள் இதன் மூலம் தாம் ஒரு சமூகத்துக்கு அழித்ததையோ அல்லது அதற்கு இளைத்த தவறுகளை மூடி மறைக்கவே முனைகின்றன.
இது மட்டுமல்லது புலிகளால் கூறப்பட்ட ஈழவிடுதலைப் போராட்ட வரலாறே இன்று எம்முன் உள்ளது. இதற்கு உதாரணமாக இன்றுள்ள மற்றைய இயக்கங்கள் எல்லாமே ஒரு துரோக இயக்கங்களாகவும், அவை என்றுமே துரோகத்தின் அடையாளங்களாகவுமே காண்பிக்கப்படுகின்றது. ஆனால் அவை எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டவை என்ற பலரால் (இளைஞர்களால்) இன்றுவரை உணரப்படவில்லை இவற்றை வெளி உலகிற்கு கொண்டுவரும் விதத்தில் எம்மிடமும் மற்றயவர்களிடமும் உள்ள ஆவணங்களையும் தொகுத்து வழங்கும் ஒரு முயற்சியே இது.
இவற்றை விட எமது இயங்கங்கள் எவ்வாறு மக்கள் மத்தியில் மார்க்சிய கருத்தை உபதேசியத்தபடி தமக்குள் பாசிசப் போக்கைக் கொண்ட இருந்தனர் என்பதையும் அம்பலத்துக்கு கொண்டு வரும் முயற்சியுமாகும். இதற்கு உதாரணமாக அண்மையில் இனியோருவில் ஜயரால் எழுதப்படும் தொடரின் பின்னோட்டத்தில், நோர்வேயில் இருந்து கவிதா என்பவரால் சிவனேஸ்வரனின் கொலை புளட் அமைப்புக்குள் எவ்வாறு நடந்தது என்றும்?, அது தொடர்பாக மேலதிக விபரங்கள் கிடைப்பின் தனக்கு அறியத்தரும் படியும் கேட்டிருந்தார். இப்படிப்பட்ட பல சம்பவங்கள் இன்னமும் பல அமைப்பினுள் நடந்தேறி இருக்கின்றது இவற்றை அறியும் வகையிலும் புளட் அமைப்பினால் எத்தனை பேர்கள் உட்படுகொலை செய்யப்பட்டனர் என்பதையும் கண்டறிவதுடன், அதன் மத்தியகுழு உறுப்பினர்கள் ஏன் இன்னமும் வாய்திறவாது உள்ளனர் என்பதை கவனத்தில் கொண்டு வரலாற்று ஆவணங்களை தொகுத்து வெளியிடுவதன் மூலம், அவர்களின் மௌத்தையும் அப்பலப்படுத்த முடியும்.
இதே போன்று ஈபிஆர்எல்எவ் இல் சன்னதி என்ற தோழர் உட்படுகொலை செய்யப்பட்டதாக அறிந்தேன். ஆனால் அவர் எவரால் எங்கு என்பது பலருக்கு தெரிந்திருந்தும், மௌனம் சாதிக்கின்றனர் ஏன்? இவற்றை கண்டறிவதற்கான முயற்சியின் முதல்படியே இவ் இனையத்தளம்.
இதில் பலரால் பல பகுதிகளில் சிறுக சிறுக சேகரித்த விடையங்களை ஒன்று திரட்டி மக்கள் முன் கொண்டு வருவதுடன், அவற்றின் மூலம் பல கோள்விகளுக்கு பதிலை கண்டறிவது அவசியம். எமது போராட்ட தவறுகளை மீண்டும் அடுத்த தலைமுறை செய்யாதிருக்கவும், புத்திஜீவிகள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் கொலைகாரர்களை மக்கள் முன் இனங்காட்டவுமே, இவ் இணையத்தளம் முற்படுகின்றது.
இதன் பெயர் தொடர்பாகவும் நாம் சிறு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளோம். அதற்கு காரணம், அண்மையில் ஒரு நண்பர் என்னிடம் என்ன இந்த தேசியத்தை இன்னமும் கைவிடவில்லையா என்று கேட்டார். காரணம் தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் என்பதால். உண்மையில் தமிழ் தேசிய என்ற பெயர் பெறக்காரணம் தமிழர்களால் நடத்தப்பட்ட யுத்தம், தமிழ் தேசியத்தை முன்னிறுத்தியது. அவ்வாறு முன்னிறுத்திய தேசிய விடுதலைப் போராட்ட ஆவணங்களை மட்டுமே இதனுள் கொண்டுவரவுள்ளதால், இது தமிழ் தேசிய என்ற சொற்பதத்தை பயன்படுத்தினோம்.
இது மட்டுமல்லாது இதில் இருக்கும் ஒரு சில விடயங்கள் எதிரியின் கைக்கு கிடைத்துவிடும், எனவே இதை அவதானமாக போடுங்கள் என்ற நண்பரின் கருத்துக்கு பதில அளிப்பது அவசியம். முதலில் யார் எதிரி என்று தெரிய வேண்டும். தமிழ் தேசிய ஆவணங்களை நாம் மறைத்து பதுக்கி வைப்போமானால், மீண்டும் முன்னைய தவறுகள் விடப்படுவதுடன் மீண்டும் பல பெருச்சாலிகளை உருவாக்க உதவும்.
இவற்றைவிட ஒரு சில விடயங்கள் நேராகவும் ஒழுங்காகவும் இல்லை. இதற்கு காரணம் ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்ற தரத்திலேயே இது வெளிவருகின்றது
எமது இவ்முயற்சியானது ஒரு குழுவின் முயற்சியே. இவர்கள் ஒவ்வோருவரின் உழைப்பும் இதில் கலந்துள்ளது. அதைவிட இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் ஆங்காங்கே பலரின் வீட்டு கூரைக்குள் உள்ளது. அவற்றை தட்டி எடுத்து வெளிக் கொண்டு வருவதே எமது நோக்கம்.
அன்பான நண்பர்களே உங்களுடம் என்ன உள்ளதோ, அவை தமிழ் தேசிய ஆவணமாக இருப்பின் எம்மிடம் தந்து உதவுங்கள். நீங்கள் எவ்வாறு தருகின்றீர்களோ அதே நிலையில் திருப்பி உங்கள் கையில் தரப்படும் என்பதனை உறுதிசெய்கின்றோம். தர விரும்பாதவர்கள் நீங்கள் அவற்றை எந்த வழியிலாவது வெளியே கொண்டு வாருங்கள். அதற்கு உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் எம்மால் முடியுமாயின் செய்து தரக்காத்திருக்கின்றோம்.
நட்புடன்
சீலன்